நாமக்கல் டிரினிடி அகாடமி மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
கிருஷ்ண ஜெயந்தி விழா
நாமக்கல் டிரினிடி அகாடமி மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம். கிருஷ்ணர் ராதை உடையணிந்து மாணவ மாணவியர் உற்சாகம்.
நாமக்கல் டிரினிடி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 23-8-2024(வெள்ளிக்கிழமை) அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவ மாணவியர்கள் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து உற்சாகமாக பவனி வந்தனர். கிருஷ்ண அவதாரம் பற்றியும் அவரின் குறும்புதனங்கள் பற்றியும் மாணவர்கள், கவிதை, ஆடல்-பாடல் என உற்சாகமாக கொண்டாடினர். கிருஷ்ணருக்கு பிடித்த சீடை, அவல், வெண்ணெய் வைத்தும் வழிபட்டனர். பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியினை ஆசிரியப் பெருமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழா நிறைவில் பள்ளி முதல்வர் சோமசுந்தரம் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.