கிருஷ்ணகிரியில் 68.90 மி.மீ., மழை பதிவு
கிருஷ்ணகிரியில் 68.90 மி.மீ., மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
Update: 2024-05-11 06:50 GMT
கிருஷ்ணகிரியில் 68.90 மி.மீ., மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து வெப்ப நிலை நிலவி வந்த நிலையில் தற்பொழுது ஆங்காங்கே மழை பெய்து வரும் சூழ்நிலையில் வெப்பம் குறைய தொடங்கியுள்ளது அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 3.20மி.மீ, தேன்கனிக்கோட்டை2.0மி.மீ, ஓசூர் 12.10மி.மீ, கிருஷ்ணகிரி4.80மி.மீ ராயக்கோட்டை7மி.மீ சூளகிரி 11மி.மீ, தளி 15 மி.மீ, சின்னார்அணை10மி.மீ, கெலவரபள்ளி அணை 1.20மி.மீ KRP அணை2.60மி.மீ என மொத்தம் 68.90மி.மீ மாவட்டத்தில் சராசரியாக 4.30மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.