கேஎஸ்ஆர் கல்விக் குழுவினர் கல்வி மேம்பாட்டிற்காக மலேசியா சுற்றுப்பயணம்

கே.எஸ்.ஆர் கல்விக் குழுவினர் கல்வி மேம்பாட்டிற்காக மலேசியா சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.;

Update: 2024-01-22 12:35 GMT

மலேசிய சென்ற குழுமத்தினர் 

திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர், சி.இ.ஓ., முதல்வர்கள், இயக்குநர்கள், தலைமைக் குழுவுடன் மலேசியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இப்பயணத்தில், KSR கல்வி நிறுவனங்கள், ஆசிய பசிபிக் டெக்னாலஜி மற்றும் இன்னோவேசன் பல்கலைக்கழகம், சன்வே பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. கே.எஸ்.ஆர் கல்விக் குழுவினர்,யுனிவர்சிட்டி டெக்னாலஜி மலேசியா உடன் கலந்துரையாடினர்.

மேலும் இது கல்வி பரிமாற்றத் திட்டங்கள், கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள், ஆசிரியர் மேம்பாடு மற்றும் மாணவர்களை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை பற்றியது KSR தென்கிழக்கு ஆசிய முன்னாள் மாணவர் சங்க கிளை 16.01.2024 அன்று தொடங்கப்பட்டது. இம்மாணவர் சங்கம், சமூக உணர்வை வளர்ப்பதோடு முன்னாள் மாணவர்களின் வலையமைப்பையும் வலுப்படுத்தும்.

கே.எஸ்.ஆர் கல்விக் குழுவினர் பயணத்தின் ஒரு பகுதியாக மலேசிய அரசாங்கத்தின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியை சந்தித்தனர். கல்லூரியின் CEO டாக்டர். அகிலா முத்துராமலிங்கம் கூறியதாவது, மலேசியப் பல்கலைக்கழகங்களுடனான எங்கள் உறவுகளை வலுப்படுத்துவதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த கூட்டாண்மை எங்கள் மாணவர்களின் கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே அறிவு பரிமாற்றம் மற்றும் கலாச்சாரப் புரிதலை எளிதாக்கும்" என்று கூறினார். இப்பயணத்தில், தலைமைத்துவ மேம்பாடு பற்றிய நுண்ணறிவான அமர்வுகளும் அடங்கும். அங்கு VUCA (நிலைமாற்றம்,நிச்சயமற்ற தன்மை, சிக்கலான தன்மை, தெளிவின்மை போன்ற தலைப்புகளில் கே.எஸ்.ஆர் கல்விக் குழுவினரும் மலேசிய கல்வியாளர்களும் விவாதங்களில் ஈடுபட்டனர்.

இச்சுற்றுப்பயணத்தின் மூலம்,KSR கல்வி நிறுவனங்கள், அதன் மாணவர்களுக்கான கல்வி அனுபவத்தை வளப்படுத்தும் மற்றும் கல்வித் துறையில் அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் உலகளாவிய வளர்ச்சியினையும் அதன் உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது எனக் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர் சீனிவாசன் தெரிவித்தார்

Tags:    

Similar News