தடகள போட்டியில் கலக்கிய மாணவர்களுக்கு பாராட்டு
பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டியில் கலக்கிய மாணவர்களுக்கு பாராட்டு;
Update: 2024-02-21 06:03 GMT
தடகள போட்டியில் கலக்கிய மாணவர்களுக்கு பாராட்டு
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான தடகள போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.இதில் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். இந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாணவர்களை பேராசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.