வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு

சங்ககிரி அருகே பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-07-04 18:10 GMT

பாராட்டு

சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி 6ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர் சங்கமேஸ்வரன் 3ம் இடத்தில் வெற்றி பெற்றார்.

மேலும் இதே துறையின் சார்பில் அம்பேத்கார் பிறந்தநாள் பேச்சு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவனுக்கு தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் தனிதனியாக வழங்கப்பட்ட பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரத்திற்கான காசோலைகள் மேலும் பாராட்டு சான்றிதழ்களை சேலம் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் காந்திமதி வழங்கினார். இதில் தமிழ்வளர்ச்சித்துறை அலுவலர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர். பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News