குளச்சல் : போதையில் அடுத்தவர் பைக்கை எடுத்துச் சென்ற நபர்
இரவு போதையில் அடுத்தவர் பைக் எடுத்து சென்ற நபர் போதை தெளிந்ததும் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் குளச்சலில் அரங்கேறியுள்ளது.;
காவல் நிலையம்
குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையருகில் உள்ள மரப் பட்டறை தொழிலாளி ஒருவர் தனது பைக்கை அங்கு நிறுத்தி சாவியை எடுக்க மறந்துவிட்டார். அதே இடத்தில் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வருபவர்களும் பைக் நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் பைக்கில் வந்த மூன்று பேர் அங்கு பைக்கை நிறுத்திவிட்டு மது அருந்த சென்றனர்.
பின்னர் அதிக போதையில் மூன்று பேரும் வெளியே வந்தனர். அதில் ஒருவர் அங்கு நின்று தொழிலாளர்களின் பைக்கை ஓட்டி சென்றுவிட்டார். மீதி இருவரும் தங்களது பைக்கில் சென்றனர். சிறிது நேரம் கழித்து மரப்பட்டறை தொழிலாளி வந்து அவரது பைக்கை பார்த்தார். உடனே இது குறித்து குளச்சல் போலீஸ்ல் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பைக் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பைக் எடுத்துச் சென்றவர் வீட்டில் போதை தெளிந்து வெளியே வந்த போது தன் வீட்டில் வேற பைக் நிற்பதை அறிந்தார். இரவு போதையில் அடுத்தவர் பைக் எடுத்து சென்றதை நண்பர்கள் வாயிலாக அறிந்து கொண்ட அவர், சம்மந்தப்பட்ட மரப்பட்டறை தொழிலாளியிடம் ஒப்படைத்தார்.