குளச்சல் : போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்

குளச்சலில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம் ஈடுப்பட்டனர்.

Update: 2023-12-05 15:25 GMT
போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலவிளை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் அஜின் (28). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் நேற்று மாலை குளச்சல் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பஸ்ஸை முந்தி செல்ல முயன்ற நேரத்தில் எதிரே வந்த ஒரு கார் வேகமாக மோதியதில் பைக் தடுமாறி சாலையில் விழுந்து அஜின் இறந்துள்ளார்.

இது குறித்து  குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.     இந்த நிலையில் அரசு பஸ் டிரைவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கேட்டு குளச்சல் பணிமனை ஓட்டுனர்கள் கண்டக்டர்கள் பஸ்கள் இயக்காமல் திடீரென இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்ததும் குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, போக்குவரத்து கழக மேலாளர் மெர்லின் ஜெயந்தி ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.     

5 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின், டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது, காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று,  பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News