நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு !

குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளராக குமரன் பொறுப்பேற்றார்.;

Update: 2024-03-20 05:34 GMT

ஆணையாளர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளராக இருந்த சரவணன், ஆரணி நகராட்சி ஆணையராக பணியிட மாறுதலில் சென்றார். இவருக்கு பதிலாக ஆரணி நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த குமரன், குமாரபாளையம் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News