குமாரபாளையம் வட்டாச்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர்

குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி கட்டிடங்களை பார்வையிட்டார்.;

Update: 2024-02-28 07:28 GMT

திறப்பு விழா 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது. குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பயணியர் மாளிகை வளாகத்தில் 3 கோடியே 44 லட்ச ரூபாய் செலவில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று மாலை சுமார் 6:20 மணி அளவில் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி கட்டிடங்களை ஆய்வு செய்தனர் அதனைத் தொடர்ந்து அலுவலக அறைகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அவற்றின் பெயர்களை எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஒப்பநததாரரிடம் அறிவுறுத்தினார் .

Advertisement

இந் நிகழ்ச்சியில் குமார பாளையம் நகர மன்ற தலைவர் விஜய கண்ணன், பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ் ,திமுக தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோ மத்திய ஒன்றிய பொறுப்பாளர் செல்வம் எக்ஸெல் கல்லூரி தாளாளர் இயக்கிய நடேசன் ஜே கே எம் கல்லூரி தாளாளர் ஜெயபிரகாஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளூர் பிரமுகர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

Tags:    

Similar News