குமரி : 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குமரியில் அத்துமீறி கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில் குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கர், ஜீப் டிரைவர் டினோ ஆகியோர் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதியில் இன்று காலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு மினி டெம்போ வேகமாக வந்தது. அந்த மினி டெம்போவை அதிகாரிகள் நிறுத்தமாறு சைகை காண்பித்தனர். ஆனால் டிரைவர் மினி டெம்போவை நிறுத்தாமல் சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ஜீப்பில் விரட்டி சென்றனர் ஒரு கட்டத்தில் டெம்போ டிரைவர் வெட்டுர்ணிமடம் பகுதியில் டெம்போவை நிறுத்திவிட்டு, தப்பி சென்று விட்டார். அதிகாரிகள் அந்த டெம்போவை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ரேஷன் அரிசியையும் மினி டெம்போவையும் பறிமுதல் செய்து அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கோணம் நுகர்வோர் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர்.