பிரதமரின் தியான நிகழ்சியை ரத்து செய்யக்கோரி குமரி திமுக மனு
பிரதமரின் தியான நிகழ்சியை ரத்து செய்யக்கோரி குமரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-29 15:39 GMT
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், "தேர்தல் நன்னடத்தை விதிமுறை தற்போது அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடியின் வருகை அதனை மீறுவதாக அமைந்துள்ளது.
தன்னை விளம்பரப்படுத்தும் நோக்கில் மோடி தியானம் மேற்கொள்கிறார். மோடியின் மூன்று நாள் வருகையால் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும்.
மேலும், பாதுகாப்பு என்ற பெயரில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள கடைகளை மூடியிருப்பதால் வணிகர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.