குமரி : முதுநிலை மருத்துவ மாணவர் தற்கொலை

குமரியில் அதிகளவிலான மாத்திரை சாப்பிட்டு முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-12-04 10:55 GMT
ராம்குமார்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சாஸ்தான்கரை என்ற இடத்தை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (53).  இவர் குளச்சல் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். தற்போது  மணவாளக்குறிச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் வீடு கட்டி அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் ராம்குமார் (27) எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு, உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஐ ஐ டி யில், எம் எம் எஸ் டி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.     

Advertisement

கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ராம்குமார் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் அவர் தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் ராம்குமார் அரையிலிருந்து வெளியே வரவில்லை.  மாலை ஆன பிறகும் ராம்குமார் வெளியே வராததால்,  வீட்டார் பார்க்கும் போது ராம்குமார் வாயில் நுரை தள்ளி,  மூக்கில் ரத்தம் வழிந்த கிடந்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் - க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து  பரிசோதித்த போது ராம்குமார்  இறந்தது தெரிய வந்தது.      

அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக  கிருஷ்ணதாஸ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News