கன்னியாகுமரி இன்று சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது.

Update: 2023-10-30 10:45 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் இங்கு சுற்றுலா பயணிகள் மட்டு மின்றி அய்யப்ப பக்தர்க ளின் வருகையும் அதிக அளவில் காணப்படும்.

இதனால் இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் மெயின் சீசன் காலமாக கருதப்படுகிறது. அதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடு முறை சீசனை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்ப டும். கன்னியாகுமரியில் இந்த 2 சீசன் காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிக அளவில் காணப்படும்.

இந்த நிலையில் தற்போது ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு பின் பயணிகளின் வருகை குறைய தொடங்கிவிட்டது. வாரத்தின் முதல் நாளான இன்று பள்ளி மற்றும் அலுவலகங்கள் செயல்பட தொடங்கியதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அடியோடு நின்று போய்விட்டது. வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகையும் மட்டுமின்றி உள்ளூர் சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமான அளவு குறைந்துவிட்டது.

தீபாவளி முடியும் வரை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது.      சுற்றுலா பயணிகளின் வருகை குறைய தொடங்கியதால் சுற்றுலா தலமான கன்னியா குமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News