அன்னசாகரத்தில் கும்ப பூஜை - பக்தர்கள் சுவாமி தரிசனம்

அன்னசாகரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மாசி மாத மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நடந்த கும்ப பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-13 07:42 GMT

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி கோயிலில் மாசி மாதம் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் லஷ்மி ஓமம் காயத்ரி ஹோமம் அம்மனுக்கு அபிஷேகங்கள் ஆராதனை நடைபெற்று.

அதைத்தொடர்ந்து சக்தி கரகம் அழைத்து கொடியேற்றம் கங்காணம் காட்டுதல் அம்மனுக்கு பால்குடம் பெண்கள் முக்கிய வீதி வழியாக முருகன் கோயில் தெரு மாரியம்மன் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு வழியாக அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் வந்தடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நேற்று இறுதி நாளான அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கும்பாபூஜை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அனைவருக் கும் அம்மனுக்கு படைக்கப் பட்ட கறி விருந்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News