25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா
சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் உள்ளிட்ட 4 கோவில்களில் 25 ஆண்டுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-02-02 08:07 GMT
கும்பாபிஷேகம்
சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தில் 25 ஆண்டுக்குப் பிறகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் உள்ளிட்ட 4 கோவில்களில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை மூலவர் மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மகா ஹோமம் நடைபெற்ற பிறகு புனித நீர் கோவில் கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷே நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.