பால விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
பால விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பையனுாரில் உள்ள பால விநாயகர் கோவிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஊர் மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவுற்ற நிலையில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில், கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து,
காலை 8:45 மணிக்கு விமான கோபுர கலத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மஹா அபிஷேகத்துடன் அலங்கார பூஜைகள் நடந்தது. 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், 48 நாட்களுக்கு, நாள்தோறும் மாலை 6:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது