ஆத்தூர்: ஸ்ரீபாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !!
ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. மேலும் இந்த கும்பாபிஷேக விழா கடந்த 17 ந்தேதி முகூர்த்த கால் நடுதல், முளைப்பாரி எடுத்தல், மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, கண் திறப்பு, தீர்த குடம், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை முதல் கால யாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று வந்ததையடுத்து இன்று காலை மூன்றாம் கால, நான்காம் கால யாக பூஜை செய்து பின்னர் பல்வேறு புன்னிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் தீபாரதனை செய்து வேத மந்திரங்கள் ஓதி மக்கள இசை முழங்க வேதவர்கள் புனித நீரை தலையில் சுமந்தவாறு கோவிலைச் சுற்றி ஊர் வலமாக வந்து கோபுரத்தில் அமைக்கப்பட்ட கலசத்தில் புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு புனித நீரை தெளித்தனர், அதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி அம்மனுக்கு புனித நீரை ஊற்றி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது, விழாக்குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.