திருமலை நாதன்பட்டியில் கும்பாபிஷேக விழா

கரூர் மாவட்டம்,திருமலை நாதன் பட்டியில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-06-10 01:24 GMT

கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், வெள்ளியணை வடபாகம் பகுதியில் உள்ள திருமலைநாதன் பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ பாம்பாளம்மன், ஸ்ரீ முனியப்பசாமி ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா மங்கல இசை உடன் துவங்கியது.

தொடர்ந்து வேதபாராயணம், திருமுறை பாராயணம், மூர்த்தி ஹோமங்கள், மூல மந்திரம் மாலா, மந்திர ஹோமங்கள், காயத்ரி ஹோமங்கள், நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி, திரவியாகுதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று, பிறகு கடம்புறப்பாடு நிகழ்ச்சியில் புனித நீரை எடுத்துச் சென்று கோவில் கலசத்தில் ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேக விழாவை நடத்தினர். மேலும் மூலவருக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள், கோவில் குடிபாட்டுகாரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News