மாசடச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
தலையூத்துப்பட்டி மாசடச்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-02-11 08:21 GMT
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, குப்பம் கிராமத்தில் உள்ள தலையூத்துப்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு மாசடச்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை 7:35-மணி முதல் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகம், பஞ்சகாவியம், கலச பூஜை, 108 மூலிகை மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி, அபிஷேகம், அர்ச்சனை, கோபூஜை, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு, யாக வெள்ளியில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் இந்தக் கோவிலுக்கு பாத்தியப்பட்ட அரிச்சந்திர குல பங்காளிகள், அவர்களது மாமன் மார்கள் உள்ளிட்ட உறவினர்களும், ஊர் பொதுமக்களும், பக்தர்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.