வந்தவாசி அருகே தொண்டை நாட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-12-15 03:22 GMT

வந்தவாசி அருகே தொண்டை நாட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் கிராமத்தில் தொண்டை நாட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி வேத விற்பன்னர்களால் கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது. மகாபூர்ணாஹூதி நடைபெற்ற பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேத விற்பன்னர்கள் கலசங்களை தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்து கோபுரத்திலுள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர் பின்னர் அந்த புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதையடுத்து தொண்டை நாட்டு மாரியம்மனுக்கு சிறப்புஅபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் மங்கள மேளவாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேகத்தை காண வந்தவாசி மற்றும் அத்திப்பாக்கம், நாவல்பாக்கம், நல்லூர், எரமலூர், தெள்ளாறு, சிவனம், ஜப்திகாரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
Tags:    

Similar News