காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் சங்கரா மட வளாகத்தில் உள்ள அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.

Update: 2024-05-06 01:43 GMT

கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர் சன்னிதி, சுரேஷ் வராச்சாரியார் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த மூன்று சன்னிதிகளையும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூன்று சன்னிதிகளிலும், பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த 1ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது.

இதில், பரணீதர சாஸ்திரிகள் தலைமையிலான 20 வேத விற்பன்னர்கள், 20 சாஸ்த்ர வித்வான்கள் குழுவினர் யாகசாலை பூஜை நடத்தினர். நேற்று மூன்று சன்னிதிகளின் கும்பாபிஷேம் விமரிசையாக நடந்தது. காலை 10:05 மணிக்கு, மூன்று சன்னிதிகளுக்கும், காஞ்சி காமகோடி பீடம், பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

தொடர்ந்து, அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர், சுரேஷ்வராச்சாரியார் உள்ளிட்ட விக்ரஹங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார மஹா தீபாராதனைமும் நடந்தன. யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர், மகா பெரியவா ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் கலசாபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தன.

கும்பாபிஷேக விழாவில் முல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, டி.சி.எஸ்., நிறுவனத்தின் ஆலோசகர் ஜெயராமகிருஷ்ணன், அசோக் நகர் தண்டாயுதபாணி ஸ்தபதி, சென்னை சமஸ்கிருத கல்லூரி முதல்வர் மணி திராவிட், சென்னை ரமண சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News