ஊத்தங்கரை அருகே ஸ்ரீ கந்தபூசி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஊத்தங்கரை அருகே ஸ்ரீ கந்தபூசி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Update: 2024-02-05 16:07 GMT
ஊத்தங்கரை அருகே ஸ்ரீ கந்தபூசி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டூ திருப்பத்தூர் மெயின் ரோட்டில் உள்ள அப்பிநாயக்கன்பட்டி தரப்பு கந்த பூசி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மகா கணபதி வழிபாட்டோடு இரண்டு கால யாக வேள்விகள் நடைபெற்று கலசங்கள் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் கந்த பூசி மாரியம்மனுக்கு பால் இளநீர் மங்கல திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேக விழாவை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்