குருத்தோளை ஞாயிறு ஊர்வலம்
குமாரபாளையத்தில் குருத்தோளை ஞாயிறு ஊர்வலம்;
Update: 2024-03-25 01:44 GMT
குருதோலை ஞாயிறு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நாளில் குருதோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே கே கே நடராஜா நகரில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலய கிறிஸ்தவ மக்களால் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடத்தப்பட்டது. மெயின் ரோடு முதல் புதிய ஜெபமாலை ஆலயம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் போது குரு தோலையை கையில் வைத்தபடி ஆண் பெண் குழந்தைகள் என நூற்றுக்கணக்கான பேர் இயேசுவை மன்றாடி கொண்டு ஆலயம் வரை சென்றனர். முன்னதாக சர்ச் பாதிரியார்கள் பிளவேந்திரன் ஹென்றிகிஸோர் ஆகியோர் புனிதப்படுத்தி ஊர்வலத்தை துவங்கி வைத்தனர். ஆலயத்தில் பலி பூஜை நடத்தப்பட்டது. அதேபோல் சடையம்பாளையம் புனித செபஸ்தியார் ஆலயத்திலும் குரு தோலை ஞாயிறு ஊர்வலமும் சிறப்பு பலிபூஜையும் நடைபெற்றது.