கே.வி.குப்பம்: ரேஷன் அரிசி பறிமுதல்!
கே.வி.குப்பம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-05-19 14:14 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வடவிரிஞ்சிபுரம் அருகே அக்கறை கிராமத்தில் பாலு என்பவரின் மாட்டுப்பண்ணை உள்ளது. அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக வட்ட வழங்கல் அதிகாரிக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் ஜனனி குழுவினருடன் நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 60 கிலோ ரேஷன் அரிசி, தவிடு மூட்டைகளுக்கு இடையே பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் துறை சார்ந்த நடவடிக்கைக்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜனனி பரிந்துரை செய்தார்.