மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை
திருவட்டார் அருகே மனைவி இறந்த மனவேதனையில் இருந்து வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தானிவிளை வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் செல்வ ராஜ்.இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் சென்னையில் வருகிறார். படித்து.இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். மனைவி இறந்த வருத்தத்தில் மிகவும் வேதனையுடன் இருந்து வந்தார். அதன் பிறகு இவரது அண்ணன் பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். அவரது பராமரிப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் தன் வீட்டுக்கு சென்று குளித்து விட்டு வருவதாக கூறி சென்றார். உ வெகு நேரமாகியும் திரும்பவரததால் வீட்டில் சென்று பார்த்தபோது அவரது படுக்கறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.