மொபட்டில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மொபட்டில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-27 09:31 GMT
பலி
பொன்னமராவதி ராமராஜன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). இவரது மனைவி அஞ்சலை. கூடை பின்னும் தொழிலாளர்கள். இருவரும் மொபட்டில் ஏம்பல் சென்றனர். குருங்களூர் பெரி யபாலம் அருகே சாலையோர பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், வழியிலேயே ராஜேந்திரன் உயிரி ழந்தார். அஞ்சலி காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஏம்பல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.