கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி இறப்பு

பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2024-03-04 07:16 GMT

 பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொட்டகம்பையை சேர்ந்தவர் நட்ராஜ் இவருடைய மகன் தமிழ்ச்செல்வன் வயது 30 கூலித் தொழிலாளி இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் தனது பிறந்த நாளை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்கா பகுதில் கொண்டாட முடிவு செய்தார் இதற்காக அங்கிருந்து தன்னுடைய தம்பி ராஜ்குமார் மற்றும் அதே பகுதியில் சேர்ந்த நண்பர்களான சுதன் கார்த்திக் உடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தார் அப்போது பவானிசாகர் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி தமிழ்ச்செல்வன் சுதன் நாகர்கோளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இரண்டு பேரும் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டனர் இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டனர் உடனே அக்கம் பக்கத்தில் ஓடிச் சென்று சுதனை மீட்டனர் தமிழ்ச்செல்வனை காப்பாற்ற முடியவில்லை இது குறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் ஈடுபட்டனர் இருட்டியதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தேடும்படி நடைபெற்றது.

மாலையில் தொப்பம்பாளையம் பகுதியில் தமிழ்ச்செல்வனை பிணமாக தீயணைப்பு இவர்கள் நேற்று பவானிசாகர் போலீசார் தமிழ்ச்செல்வனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில் வாய்க்காலில் தமிழ்ச்செல்வன் மூழ்கி இருந்த சம்பவம் அவருடைய உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News