குமாரபாளையத்தில் நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி

குமாரபாளையம் அருகே தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளின் பெற்றோர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் வெயிலில் அவதி அடைந்தனர்.

Update: 2024-05-05 12:39 GMT

வெளியில் காத்துக்கிடக்கும் பெற்றோர்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் செயல்படும் ராயல் இன்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுமார் 582 மாணவ மாணவிகள் நுழைவு தேர்வு எழுதி வருகின்றனர்.

மாலை 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் இப் பள்ளியில் மட்டும் தேர்வு எழுதுவதற்கு சேலம் ஈரோடு நாமக்கல் கேரளா திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் வந்துள்ளனர் அவர்களுக்கு உறுதுணையாக பெற்றோர்களும் வந்துள்ளனர் மாணவ மாணவிகள்,

நுழைவு தேர்வு எழுத சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த பெற்றோர்கள் தங்குவதற்கு போதிய நிழல் வசதி கழிப்பிட வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட பள்ளி நிர்வாகம் செய்து தராததால் கடும் கோடை வெயிலிலும் பெற்றோர் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது போதிய இடவசதிகள் இருந்தும் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக செயல்படுவதால் பெற்றோர் பெரும் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News