ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கக் கூட்டம்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கூட்டம் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது,
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிலை பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில், மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தெரிவிக்கையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட், குறைந்தபட்ச ஆதார விலை. விவசாய கடன் தள்ளுபடி, வங்கிகளில் வட்டியில்லா பயிர்கடன் தனிநபர் பயிற் காப்பீட்டு திட்டம், ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று 2024 பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் கூறுகின்ற தேசிய கட்சிக்கு அல்லது கூட்டணி கட்சிக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்,
மேலும் விளைவித்த பொருளுக்கு குளிர்பதனை கிடங்கு அமைத்து தர வேண்டும், சின்ன வெங்காயம் மற்றும் வாழைக்கு ஏற்றுமதி முனையும் வேண்டும், புதிய மின்சார திட்டம் கைவிடுதல் வேண்டும், பிரதான் மந்திரி கிசான் நிதி உதவி திட்டத்தில் மூன்று மாதத்திற்கு நான்காயிரம் அறிவிக்க வேண்டும், வேளாண் பொருட்கள் மீது விற்பனை வரி, இடுபொருள்கள் வரி ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.