குமாரபாளையம் அருகே வீடுகளுக்குள் புகுந்த ஏரி நீர்
Update: 2023-11-27 02:27 GMT
வெள்ளநீரை வெளியேற்றும் பணி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் ஏரி உள்ளது. நேற்று பெய்த கனமழையால் ஏரி நிரம்பி, அதன் உபரி நீர், தாழ்வான பகுதியான எம்.ஜி.ஆர். நகரில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட திட்ட அலுவலர் சிவகுமார், பி.டி.ஒ.க்கள், டேவிட் அமல்ராஜ், மலர்விழி, மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் செந்தில், தட்டான்குட்டை ஊராட்சி தலைவர் புஷ்பா, ஒன்றிய அ.தி.மு.க. செயலர் குமரேசன் உள்ளிட்ட பலர் நேரில் பார்வையிட்டனர். அதிகாரிகள் உத்திரவின் பேரில் நீர் வழிந்தோடும் பாதையில் ஆழப்படுத்தி வடிகாலில் விடப்பட்டது. வரும்காலத்தில் இது போல் நடக்காதிருக்க நீர்வழிப்பாதை உயரப்படுத்தவும், வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு அதிகாரிகள் ஆறுதல் கூறினார்கள்.