லட்சுமி நரசிம்மர் பிரதிஷ்டை வைபவம்
குமாரபாளையத்தில் லட்சுமி நரசிம்மர் பிரதிஷ்டை வைபவம் நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 13:27 GMT
நரசிம்மர் வைபவம்
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் பிரதிஷ்டை வைபவம் நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு லட்சுமி நரசிம்மர் சுவாமிகள் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள மங்களாம்பிகை, மகேஸ்வரர், சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கால பைரவர், தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கல்யாண விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.