கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் விளக்கு பூஜை

கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் விளக்கு பூஜை.

Update: 2024-04-24 05:16 GMT

 திருவிளக்கு பூஜை

திருக்கோவிலுார் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி, சப்தமாதா திருவிளக்கு பூஜை நடந்தது. திருக்கோவிலுார் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் ஆயிரம் கண்ணுடையால் அலங்காரத்தில் அருள் பாலித்தனர். உற்சவர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். பெண்கள் பலரும் பங்கேற்ற சப்தமாதா திருவிளக்கு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை ஆரிய வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News