நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாள் விழா நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2024-02-25 04:07 GMT
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாள் விழா நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட அதிமுக வழக்குரைஞா் பிரிவு சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாள் விழா நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சேகா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், முன்னாள் டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் பாலுசாமி ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். மேலும், வழக்குரைஞா் பரணிதரன், முன்னாள் அரசு வழக்குரைஞா் தனசேகா், புதுச்சத்திரம் மேற்கு ஒன்றியச் செயலாளா் கோபி, நாமக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் முரளி பாலுசாமி ஆகியோா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா். விழாவில் பங்கேற்ற கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.