வ.உ.சிதம்பரம் கல்லூயில் அஸ்ட்ரோ க்ளப் துவக்கம்!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூயில் வ.உ.சி அஸ்ட்ரோ க்ளப் துவக்க விழா மற்றும் கோள் திருவிழா கொண்டாட்டம் நடந்தது. .
Update: 2024-02-23 09:59 GMT
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் முதுகலை & இயற்பியல் ஆராய்ச்சி துறை சார்பாக கல்லூரி முதல்வர் சி.வீரபாகு மற்றும் இயற்பியல் துறை தலைவர் ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம் தலைமையில் அஸ்ட்ரோ க்ளப் துவக்கம் மற்றும் கோள் திருவிழா கொண்டாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆஸ்ட்ரோ கிளப் தலைவர் கோ.எழிலன் கலந்து கொண்டு திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மற்றும் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் முத்துசாமி வன்னியப்பன், மாவட்ட கருத்தாளர் சம்பத் சாமுவேல், ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முதலில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியை ஏ.இன்ஃபான்டியா டாப்னி பெர்னாண்டோ வரவேற்பு உரை வழங்கினார். ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம், மற்றும் சி.வீரபாகு தனது உரையில் அஸ்ட்ராலஜி ஒரு நல்ல பாடத்திட்டம் என்பதை விவரித்துக் கூறினார். பின்னர் தலைமை விருந்தினர்க்கு நினைவுப்பரிசு வழங்கினார். கோ. எழிலன் இந்திய விண்வெளித் திட்டங்கள் மற்றும் சூரியன் மற்றும் சந்திரனுக்கான இஸ்ரோவின் பணி குறித்து விரிவாகப் பேசினார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள பல்வேறு இஸ்ரோ மையங்களுக்கு குறிப்பாக செயற்கைக்கோள் ஏவுதளத்தை பார்வையிடுவதற்கான நடைமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆஸ்ட்ரோ கிளப்பின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கினார். விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இயற்பியல் துறையில் ஆதித்யா எல்1, சந்திராயன், மங்கள்யான், சுகர்யான், ககன்யான் மற்றும் ஆஸ்ட்ரோசாட் என ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டன. மாணவர்கள் வானியல் தொலைநோக்கி மூலம் கோள்களைப் பார்க்கும் வாய்ப்பையும் பெற்றனர். இறுதியாக துறையின் உதவிப் பேராசிரியை எஸ்.சுபா நன்றி கூறினார்.