வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2024-06-19 12:06 GMT

ஆர்ப்பாட்டம்

தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று தமிழகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் காவல் துறையை கண்டித்தும், கனிமவள கொள்ளை அதனால் ஏற்படும் உயிர் பலிகள் ஆகியவற்றை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர்கள் ஆர். மாடக்கண்ணு, சிவகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் அருண், துணை தலைவர் ரெங்கராஜன், சண்முகராஜன், கண்ணன், பொருளாளர் ஜெபா, இணை செயலாளர் செல்வகுமார் மற்றும் சங்கநிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமாரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தென்காசி திருநெல்வேலி மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு சாலையை கடக்க பெண்கள், குழந்தைகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அனைவருக்கும் மிகவும் சிரமமாக உள்ளதால் இந்த பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும், கேரளாவிற்கு கனிம வளங்களை எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News