வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம்
வழக்கறிஞர் கௌதமன் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம் செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 10:16 GMT
வழக்கறிஞர் கௌதமன் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம் செய்தனர்.
சென்னை திருவான்மியூரில் வழக்கறிஞர் கெளதமன் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் பார் அசோசியேசன் , திருப்பூர் அட்வகேட் அசோசியேசன் , திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் அசோசியேசன் ஆகியவற்றை சேர்ந்த 700 வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் , வழக்கறிஞர் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இனிமேல் இது போன்ற தாக்குதல் சம்பவம் நடைபெறாத வகையில் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தின் மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.