பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்
நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்;
By : King 24x7 Website
Update: 2023-12-22 17:42 GMT
நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்
அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னை உயர்நீதிமன்றம் என்பதனை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் மாநில அரசு உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும், சேமநல நிதியை 25 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.