திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்கள் போராட்டம் !

திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-26 10:07 GMT

வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்தியன் பீனல் கோட்கிரிமினல் ப்ரொசீஜர் கோட் இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் ஆகிய சட்டங்களைசமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து சட்ட விதி எண்களை மாற்றி நடைமுறையில் இருப்பதை குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்துவருகிற ஜூலை ஒன்றாம் தேதி முதல் தமிழ் படுத்த உள்ள நிலையில்சட்ட மாற்றத்திற்கு எதிராக அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 35க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்பு ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை கைவிட வலியுறுத்தி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சி.பரணீதரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சி. கோவிந்தராஜ், வி. பாபு சுப்ரமணியம், கோமதி,கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் ஒன்றிய அரசு மாற்றங்களை கொண்டு வந்து, அதனை வரும் ஜூலை 1 ம் தேதியிருந்து நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறியுள்ளது. அதை மீறி இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவில்லை; பறிக்கிறது, ஏற்கெனவே உள்ள சட்டங்களில் தேவையேற்படின் திருத்தம் கொண்டு வந்து புதிய பிரிவுகளை சேர்க்கலாம்.

மாறாக, பழைய சட்டத்தின் பெயரை மாற்றி, புதிதாக ஒரு சில பிரிவுகளை இணைத்து, குழப்பமான விளக்கங்களை கொடுத்துள்ளனர். இதனால் வழக்கறிஞர்கள் பொதுமக்கள், பாதிக்கப்படுவர்கள் என்பதால், அந்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த சட்டத்தின் பாதகங்களை மக்களிடம் வழக்கறிஞர்கள் எடுத்துரைக்க வேண்டும். வழக்கு தொடுப்பது, ஜனநாயக ரீதியில் இயக்கம் நடத்துவது என வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் எஸ்.சேகரன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் 12 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இறுதியாக வழக்கறிஞர் ஜி. கோபி நன்றி கூறினார்.

Tags:    

Similar News