ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு
திருமருகல் அருகே ரூ.3 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்ட தமிழ்நாடு மீன் வளர்சிக்கழகத் தலைவர் கெளதமன் அடிக்கல் நாட்டினார்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சேதமடைந்ததை அடுத்து புதிய கட்டிடம் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு தலைவர் ராதாகிருட்டிணன்,ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.டி.எஸ்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ,தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து ரூ.46 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் திருப்பயத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம்,ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் திருப்பயத்தங்குடி பயணிகள் நிழலகம் அமைப்பதற்கும்,திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் ரூ.1 கோடியே 26 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், தாசில்தார் ரமேஷ்குமார்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆரூர் மணிவண்ணன்,இளஞ்செழியன்,அபிநயா அருண்குமார்,வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம்,மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் லியாக்கத் அலி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்,அரசு அலுவலர்கள், சுகாதார துறையினர்,பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.