திருப்பூரில் இளம் சிறார்குற்றவாளிகளுக்கு சட்ட உதவி முகாம்

திருப்பூரில் இளம் சிறார் குற்றவாளிகளுக்கு சட்ட உதவி முகம் நடைபெற்றது.

Update: 2024-01-27 06:14 GMT


திருப்பூரில் இளம் சிறார் குற்றவாளிகளுக்கு சட்ட உதவி முகம் நடைபெற்றது.


திருப்பூர் இளம்சிறார் குற்றவாளிகளுக்கு சட்ட உதவி முகாம். முதன்மை மாவட்ட நீதிபதியும், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள இளம்சிறார் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கான சட்ட உதவிகளை வழங்குவது குறித்த சிறப்பு முகாம் தொடக்க விழா, திருப்பூர் மாவட்ட சிறையில் நடைபெற்றது. சிறை கண்காணிப்பாளர் சசிகுமார் வரவேற்று பேசினார்.

கூடுதல் சார்பு நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான மேகலா மைதிலி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:& ஒவ்வொருவரும் தங்களுடைய ஏதேனும் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்திருக்கலாம். ஆனால் அத்தகைய தவறுகளை உணர்ந்து வெளியே சென்றவுடன் மீண்டும் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ வேண்டும். நீங்கள் ஒருவர் செய்யும் தவறினால் உங்கள் குடும்பமே அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்காக நல்வழியில் வாழ முயற்சி செய்ய வேண்டும்.

என்றார். இதன் பின்னர் சிறைவாசிகளிடம் குறைகளை கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார். நிகழச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் ரஞ்சித்குமார் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கான சட்ட உதவி மைய உதவி வக்கீல் சந்தியா ஆகியோர் முகாமின் நோக்கம் குறித்து சிறப்புரை வழங்கினர்.

Tags:    

Similar News