திருப்பூர் ஊராட்சி ஒன்றியபள்ளியில் மனிதஉரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்.

திருப்பூர் ஊராட்சி ஒன்றியபள்ளியில் மனிதஉரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-12-05 09:36 GMT

விழிப்புணர்வு முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மனித உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரிலும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியும், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதல் பேரில் உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருப்பூர் தெற்கு திருக்குமரன் நகர் பகுதியில் உள்ள அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மனித உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நிகழ்வில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் மகேஷ்குமார் வரவேற்றார். மனித  உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர் சி.எம். அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்று அடிப்படை  மனித உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்தும், மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் சட்டத்தை எவ்வாறு அணுகுவது சட்ட உதவிகளை எப்படி பெறுவது என்பது குறித்தும் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் சட்ட உதவி மையம் குறித்தும் பேசினார்கள். நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News