சிறுத்தை நடமாட்டம்: தீவிர கண்காணிப்பு

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் ஆறு மற்றும் ஓடையோரங்களில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-04-08 15:16 GMT

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் ஆறு மற்றும் ஓடையோரங்களில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை அருகே கோமல் மற்றும் காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தையை நேரில் பார்த்ததாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும் , இதில் சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் எச்சம் போன்ற அடையாளங்கள் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூரில் இருந்து WWF - INDIA நிபுணர் குழு முப்பது கேமரா ட்ராப்புகளுடன் களத்தில் பணியை தொடங்கி இருப்பதாகவும். மேலும் விஞ்ஞானபூர்வமாக சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய களப்பணியாளர்களுடன் கூட்டாக களத்தில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நண்டலாறு மற்றும் வீரசோழன் ஆறு ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை முற்றிலும் குறைக்கும் வகையில் இன்று தொடர் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் , மேலும் இன்று சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் சாத்திய கூறுகள் உள்ளடக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் கள உபகரணங்களை கொண்டு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாகப்பட்டினம் மாவட்ட வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News