அனைவரும் 100% வாக்களிப்போம் கையெழுத்து இயக்கம் துவக்கம்
திருவாரூரில் அனைவரும் 100% வாக்களிப்போம் கையெழுத்து இயக்கத்தினை மாவட்டக் கலெக்டர் துவக்கி வைத்தார்.;
Update: 2024-03-12 17:06 GMT
திருவாரூரில் அனைவரும் 100% வாக்களிப்போம் கையெழுத்து இயக்கத்தினை மாவட்டக் கலெக்டர் துவக்கி வைத்தார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் .பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் செந்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.