ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

வெண்ணந்தூர் வட்டார வளமையம் சார்பில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-03-12 13:51 GMT

முகாமில் கலந்து கொண்டவர்கள் 

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - உள்ளடங்கிய கல்வி சார்பில், வெண்ணந்தூர் வட்டார அளவிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஏதுவான சூழ்நிலை ஏற்படுத்துதல் இணைவோம் மகிழ்வோம் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் சிறப்புகள் குறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன் விளக்கினார். இதில், 1. புதிரை கண்டுபிடி, 2.நடித்து விளையாடு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் இணைந்து மற்ற மாணவர்கள் விளையாடினர்.

3.பலூன் விளையாட்டு - இதில், பெற்றோர்கள் இன்முகத்துடன் ஆர்வத்துடனும் குழுவாக கலந்து கொண்டு தங்களது பங்களிப்பினை வெளிப்படுத்தினர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது மாற்றுத்திறன் மாணவர்களின் கல்வி அவர்களின் திறன் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை நாம் உறுதி செய்ய முடியும் என்பதனை செயல்பாடுகள் மூலம் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்று மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமையப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News