நிலத்தடி நீரில் மாசின்றி மக்களை காப்பாற்றுவோம் -பிரேமலதா விஜயகாந்த்

சாய நீர் கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரமான குடிநீரும், நிலத்தடி நீர் மாசு இல்லாமலும் மக்களை காப்பாற்றுவோம் என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா கூறினார்.

Update: 2024-03-30 06:11 GMT

சாய நீர் கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரமான குடிநீரும், நிலத்தடி நீர் மாசு இல்லாமலும் மக்களை காப்பாற்றுவோம் என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா கூறினார்.

ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கனிராவுத்தர் குளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரேமலதா விஜயகாந்த் , ஈரோடு பெரியார் பூமி என்றும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் பண்பாளர்கள் என்றும் மறைந்த எம்..பி ணேசமூர்த்தி கூட்டணி சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம் என்றார். சாதி , மததுக்கு அப்பாற்றப்பட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி என்றும் சாய நீர் கழிவுகளை நிச்சயமாக அப்புறப்படுத்தி சுகாதாரமான குடிநீரும் நிலத்தடி நீர் மாசு இல்லாமல் உறுதியாக மக்களை காப்பாற்றுவார், எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம் என்பதால் இந்த போதை கலாச்சாரத்தை இந்த கூட்டணி முறியடிக்கும் என்றும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை ஒழிப்போம் என்ற பிரேமலதா விஜயகாந்த் நெசவும் , விவசாயத்தையும் முக்கியம் என்பதால் அதை காப்போம் என்றார்.

4 பேர் கூட்டணியை சரித்திர கூட்டணியாக பொதுமக்கள் மாற்ற வேண்டும் என்றும் திமுக கூட்டணி வானவில் கூட்டணி் என்று விமர்சனம் செய்த பிரேமலதா விஜயகாந்த் , கூட்டணி தர்மத்தோடு 4 கட்சிகளும் இயங்கி ஜூன் 4 ம் தேதி 40 தொகுதிகளையும் வெல்லுவோம் என் கூறி பேச்சை நிறைவு செய்தார்

Tags:    

Similar News