விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின், நிர்வாகிகள் கூட்டம், நடைபெற்றது . பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஜனநாயகம் வெல்லும் என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் டிசம்பர் 23ம் தேதி மாநில மாநாடு நடைபெற உள்ளது, இந்த மாநில மாநாடு குறித்து, கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிப்பது இதற்கான சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது, துண்டு பிரசுரங்கள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து கலந்து அலோசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, மாநாட்டில் கலந்து கொள்வதற்கும், திரளான பொதுமக்கள் மற்றும் கட்சியினரை அனைத்து செல்வது குறித்தும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர்கள் அன்பானந்தன், சிதம்பரம், இரா.கிட்டு, மண்டல துணைச் செயலாளர்கள் மாறன், லெனின், கிருஸ்ணகுமார், மன்னர்மன்னன், தமிழ்மாணிக்கம், சீனிவாசராவ் , தங்க சண்முகசுந்தரம், மாவட்ட அமைப்பாளர்கள் முரசொலி, அய்யாக்கண்ணு, ஓன்றிய செயலாளர்கள் வெற்றியழகன், இடிமுழக்கம், மனோகரன், பாஸ்கர், பிச்சப்பிள்ளைமற்றும் மாநில, மண்டல, மாவட்ட, நரக, ஓன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.