சாலை விபத்தில் எல்.ஐ.சி., முகவர் பலி
கட்டிபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் எல்.ஐ.சி., முகவர் உயிரிழந்தார்.;
Update: 2024-04-01 09:59 GMT
கட்டிபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் எல்.ஐ.சி., முகவர் உயிரிழந்தார்.
எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், நல்லையன்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் கோபால்43. திருமணமாகாதாவர். எல்.ஐ.சி.,முகவராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்றுமுன்தினம் இரவு 11மணியளவில் பணியை முடித்துவிட்டு, அவரது ஸ்பிலிண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் வையப்பமலையில் இருந்து, கொன்னையார் நோக்கி வந்துள்ளார்.
கட்டிபாளையம் அடுத்த, மரப்பரை பிரிவு சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த அசோக் லைலேண்ட் டிப்பர்லாரி மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 108ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, 12மணிக்கு உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.