காற்றுடன் கூடிய சாரல் மழை சில இடங்களை விட்டுவிட்டு பெய்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலைநேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஆங்காங்கே சாரல் மழை பெய்தது.
By : King 24x7 Angel
Update: 2024-06-20 05:54 GMT
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதல் கடும் வெயில் நிலவி வந்த நிலையில், மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை திடீரென பெய்தது , மணல்மேடு, கடலங்குடி பகுதியில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை செம்பனார்கோவில், குத்தாலம், கோனேரிராஜபுரம், பாலையூர், ஸ்ரீகண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பல்வேறு பகுதியில் சாரல் மழை பல்வேறு இடங்களில் மழை தூரல் இல்லை. ஒரு சில இடங்களில் விவசாய நிலங்களில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் அதேசமயம் பூக்கும் பருவம் மற்றும் அறுவடை தருணத்தில் உள்ள பருத்தி விவசாயிகள் மத்தியில் இந்த மழை கலக்கத்தை ஏற்படுத்தியது. பலத்த காற்றால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.