பேரளம் அருகே சாராயம் விற்பனை: இருவர் கைது
பேரளம் அருகே சாராயம் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-04 05:41 GMT
கோப்பு படம்
பேரளம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது கீரனூர் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கீரனூர் வள்ளலார் தெருவை சேர்ந்த நல்லதம்பி என்பதும் சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் பூந்தோட்டம் அரசலாற்று பாலம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் மேலருத்ரகங்கை பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பதும் சாராயம் விற்பனை செய்ததும் தெரியவந்தது . போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.