திருட்டு மது விற்பனை  - 6 பேர் கைது 

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர்களை கைது செய்தனர்.

Update: 2024-03-31 06:46 GMT
கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வகையில் நேற்று மாவட்ட முழுவதும் திருட்டு மது விற்பனை செய்தவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு, 176 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் கடுக்கரை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது திருட்டுத்தனமாக மது விற்ற ராஜம் (63) என்ற பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடம் 45 மது பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன,

ஆரல்வாய் சப் இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையிலான போலீசார் செண்பகராமன் புதூர் பகுதியில் அனுமதி இன்றி மது விற்ற ஸ்ரீகுமார் (60) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 13 மது பாட்டில்களும், 4 ஆயிரத்து 500 ருபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் இருளப்பபுரம் சந்திப்பில் நாகராஜன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 6 பாட்டில்கள் செய்யப்பட்டது.

மேலும் இரணியல் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது காந்திமதி நாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமைதான போலீசார் அனுமதி இந்த மது விற்ற செல்வராஜ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 22 மது பாட்டில்கள் 1500 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்த அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News